04

E   |   සි   |  

 திகதி: 2025-03-01   பதிலளிக்கப்பட்டவைகள் 

0387/2025: காலி துறைமுக வளவில் அரச மரக்கன்றை நடுதல்: தடைகள்

387/2025

கௌரவ சானக மாதுகொட,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) காலி துறைமுக வளவில் காணப்பட்ட அரச மரம் அழிவடைந்ததன் காரணமாக அதற்குப் பதிலாக புனித ஜயஸ்ரீ மகா போதிமரக் கன்று ஒன்றை நடுவது குறித்து துறைமுக ஊழியர்கள் மற்றும் நிருவாகத்தினருக்கு இடையே தோன்றியுள்ள கருத்துவேறுபாடு பற்றி அறிவாரா என்பதையும்;

(ii) மேற்படி அரச மரக் கன்றை காலி துறைமுக வளவில் நடுவதிலுள்ள தடைகள் யாவை என்பதையும்;

(iii) காலி துறைமுக வளவில் மேற்படி அரச மரக் கன்றை நடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா;

(iv) மேற்படி கருத்து வேறுபாட்டைத் தீர்க்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-01

கேட்டவர்

கௌரவ சானக மாதுகொட, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-03-01

பதில் அளித்தார்

கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks