பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
383/2025
கௌரவ ரோஹித அபேகுணவர்தன,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான டிப்போக்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) மேற்படி டிப்போக்களில் இலாபம் ஈட்டும் மற்றும் நட்டத்தில் இயங்கும் டிப்போக்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;
(iii) நட்டத்தில் இயங்கும் டிப்போக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
(iv) போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(v) மேற்படி பேருந்துகளில் தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மற்றும் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ள பேருந்துகளின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;
(vi) பேருந்துகள் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;
(vii) இலங்கை போக்குவரத்துச் சபையின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) இலங்கையிலுள்ள புகையிரத நிலையங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மற்றும் சேவையிலிருந்து நீக்கப் பட்டுள்ள புகையிரதங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;
(iii) புகையிரதங்கள் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;
(iv) தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள புதிய புகையிரதங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(v) இலங்கை புகையிரத திணைக்களத்தின் மொத்த ஊழியர் எண்ணிக்கை யாதென்பதையும்;
(vi) அந்தத் திணைக்களத்தின் அமய ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-04-08
கேட்டவர்
கௌரவ ரோஹித அபேகுணவர்தன, பா.உ.
அமைச்சு
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2025-04-08
பதில் அளித்தார்
கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks