04

E   |   සි   |  

 திகதி: 2025-11-15   பதிலளிக்கப்பட்டவைகள் 

0345/2025: வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவு: குடிநீர் வசதிகள்

345/2024
கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்,— வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனையறுப்பான், பன்சேனை, வாதக்கல்மடு, பாவற்கொடிசேனை, உன்னிச்சை, நெடியமடு போன்ற பிரதேசங்களுக்கு இதுவரை குடிநீர் வசதிகள் வழங்கப்படவில்லை என்பதையும்;
(ii) உன்னிச்சையிலிருந்து பல்வேறு பிரதேசங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லப்பட்ட போதிலும், உன்னிச்சை மக்களுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) ஆமெனில், மேற்படி (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு குடிநீர் வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
(ii) அப்பிரதேசங்களுக்கு குடிநீர் வசதிகள் வழங்கப்படும் காலப்பகுதி யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-11-15

கேட்டவர்

கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2026-02-03

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) சுசில் ரணசிங்ஹ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks