logo

03

E   |   සි   |  

 திகதி: 2014-01-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

2668/2014: Mahinda Chinthana - 2500 Gardening and 19 Fruits Villages

2668/ ’12

கெளரவ சஜித் பிரேமதாச,—  பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      மஹிந்த சிந்தனை எதிர்காலத்திற்கான தொலைநோக்கில் குறிப்பிடப் பட்டுள்ளவாறு கிழக்கின் உதயத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட 2500 வீட்டுத் தோட்டங்கள்   மற்றும் 19 பழ உற்பத்தி கிராமங்கள் ஆகியவற்றை உருவாக்கும் நிகழ்ச்சித்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், இந் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள வீட்டுத் தோட்டங்களினதும் பழ உற்பத்திக் கிராமங்களினதும் மொத்த எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) மஹிந்த சிந்தனைக்கேற்ப மேற்படி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத் தோட்டங்கள் மற்றும் பழ உற்பத்திக் கிராமங்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கு ஏதேனும் புதிய வர்த்தக முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், அந்த முறையுடன் தொடர்புடைய விபரங்கள் யாவையென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-01-23

கேட்டவர்

கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

அமைச்சு

பொருளாதார அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

Attached

பதில் தேதி

2016-07-10

பதில் அளித்தார்

கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks