பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
228/2024
கௌரவ அஜித் பி. பெரேரா,— நீதி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ஊழல் ஒழிப்பு தொடர்பாக கொழும்பில் இயங்கும் வகையில் தாபிக்கப்பட்டுள்ள மூவரடங்கிய நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் தாபிக்கப்பட்ட சட்டம் யாதென்பதையும்;
(ii) மேற்படி நீதிமன்றத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;
(iii) மேற்படி நீதிமன்றத்தில் தற்போது விசாரணை செய்யும் வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் மேற்படி நீதிமன்றத்தில் விசாரணைசெய்து நிறைவு செய்துள்ள வழக்குகளின் எண்ணிக்கை வெவ்வேறாக எத்தனை என்பதையும்;
(iv) ஆரம்பிக்கப்பட்ட திகதி முதல் இதுவரையில் மேற்படி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை ஆண்டு வாரியாக வெவ்வேறாக எத்தனை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) ஊழல் ஒழிப்பு மூவரடங்கிய நிரந்தர நீதாய மேல் நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளை ஆரம்பித்தல் மற்றும் நடாத்திச்செல்லுதல் செயலிழந்துள்ளதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(ii) இலஞ்சம், நிதிக் குற்றங்கள் மற்றும் நிதி மோசடி வழக்குகளைத் துரிதமாக விசாரணை செய்து நிறைவு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-10-10
கேட்டவர்
கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.
அமைச்சு
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2026-02-20
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்கார, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks