E   |   සි   |  

 திகதி: 2025-03-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

0191/2025: அரச சீனிக் கம்பனிகள்: விபரம்

191/2024
கௌரவ நலின் பண்டார ஜயமஹ,— கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) இலங்கையில் உள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான சீனி உற்பத்தி நிறுவனங்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(ii) அவற்றின் பெயர்கள் யாவை என்பதையும்;
(iii) 2022 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனியின் அளவு மற்றும் அதற்காக செலவிடப்பட்ட மொத்தத் தொகை ஆண்டுவாரியாக வெவ்வோறாக எவ்வளவென்பதையும்;
(iv) அரசாங்கத்திற்குச் சொந்தமான சீனி உற்பத்தி தொழிற்சாலைகளில் தற்போது விற்பனை செய்ய முடியாத நிலையில் தேங்கிக் கிடக்கும் சீனி மற்றும் எதனோலின் அளவு வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
(v) இலங்கையில் சீனி உற்பத்தியை அதிகரிப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-21

கேட்டவர்

கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

அமைச்சு

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-06-06

பதில் அளித்தார்

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks