01

E   |   සි   |  

 திகதி: 2024-12-17   பதிலளிக்கப்பட்டவைகள் 

0096/2024: வாஷிங்டன் நகரில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடலில் பங்கேற்ற தூதுக்குழுவினர்: செலவினம்

96/2024

கௌரவ சாமர சம்பத் தசனாயக,— நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) சமீபத்தில் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பங்குபற்றிய அலுவலர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;

(ii) இவர்களின் விமான பயணச் சீட்டுகளுக்காகவும், பயணத்திற்காகவும் செலவிடப்பட்ட பணத்தொகை ஐக்கிய அமெரிக்க டொலர் மற்றும் இலங்கை ரூபாவில் வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;

(iii) மேற்படி கலந்துரையாடல்களின் நிமித்தம் லஸாட் மற்றும் கிளிபர்ட் சான்ஸ் ஆகிய நிறுவனங்களுக்குச் செலுத்தப்பட்ட பணத்தொகை எவ்வளவு என்பதையும்;

(iv) மேற்படி கலந்துரையாடல்கள் மூலமாக இலங்கைக்கு கிடைத்த நன்மைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2024-12-17

கேட்டவர்

கௌரவ சாமர சம்பத் தசனாயக, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2024-12-17

பதில் அளித்தார்

கௌரவ (கலாநிதி) ஹர்ஷண சூரியப்பெரும, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks