01

E   |   සි   |  

 திகதி: 2025-01-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0068/2025: வவுணதீவில் வீடமைப்புத் திட்ட நிர்மாணம்: நிறைவு பெறாமை

68/2024

கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்,— நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் மட்டக்களப்பு, மண்முனை - மேற்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வவுணதீவு பிரதேசத்தில் 50இற்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட வீட்டுத் திட்டமொன்று நிர்மாணிக்கப்பட்டதென்பதையும்;

(ii) அவ்வீட்டுத்தொகுதியிலுள்ள சில வீடுகளின் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ள போதிலும், மேலும் சில வீடுகளின் நிர்மாணப் பணிகள் இதுவரை நிறைவு செய்யப்படவில்லை என்பதையும்;

(iii) அதன்பின் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் அவ்வீடுகளைப் புனரமைத்து மக்களிடம் கையளிக்கவில்லை என்பதையும்;

(iv) அதன் காரணமாக 8 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) ஆமெனில், மேற்படி வீட்டுத்திட்டத்தை முழுமையாக நிறைவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;

(ii) எக்காலப்பகுதியில் அவ்வீட்டுத்திட்டம் முழுமையாக நிறைவு செய்யப்படும் என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-01-22

கேட்டவர்

கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-01-22

பதில் அளித்தார்

கௌரவ அனுர கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks