04

E   |   සි   |  

 திகதி: 2012-08-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

2502/2012: Circuit Bangalow -Buluthota, Kadamuduna

2502/ ’12

 

கௌரவ (திருமதி) தலதா அதுகோரல,— நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொதுவசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)    (i)      இரத்தினபுரி மாவட்டத்தில் கொலொன்ன பிரதேச செயலகப் பிரிவின் புலுதொட்ட கடமுதுனவில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி நிர்மாண, பொறியியல் சேவைகள் வீடமைப்பு, பொதுவசதிகள் அமைச்சருக்கு உரித்தானதா என்பதையும்;

(ii) மேற்படி சுற்றுலா விடுதி தற்போது வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதா என்பதையும் ;

(iii) இது குத்தகைக்கு விடப்பட்ட போது கேள்விப் பத்திர நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளதா என்பதையும்;

(iv) ஆமெனில், அதற்காக முன்வைக்கப்பட்ட விலைகள் யாவையென்பதையும்;

(v) மேற்படி சுற்றுலா விடுதி குத்தகைக்கு விடப்பட்ட கேள்விப் பத்திரத்தின் பெறுமதி யாதென்பதையும்;

(vi) மேற்படி கேள்விப் பத்திரமானது முன்வைக்கப்பட்ட ஆகக்கூடிய பெறுமதியைக் கொண்ட கேள்விப் பத்திரமல்ல என்பதை அவர் ஏற்றுக் கொள்வாரா என்பதையும்;

(vii) ஆமெனில், மேற்படி குத்தகை உடன்படிக்கையை இரத்துச் செய்து மீண்டும் கேள்விப் பத்திரங்களை கோருவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-08-22

கேட்டவர்

கௌரவ (திருமதி) சட்டத்தரணி தலதா அதுகோரல, பா.உ.

அமைச்சு

நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks