04

E   |   සි   |  

 திகதி: 2013-02-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

2415/2013: "இலங்கை அபிவிருத்திச் சேவை" வேலைத்திட்டம் : விபரம்

2415/ ’12

கெளரவ தயாசிறி ஜயசேகர,— பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      “இலங்கை அபிவிருத்தி சேவை” என்ற பெயரில் அரச தொழில் வழங்கும் வேலைத்திட்டமொன்று நடைமுறையில் உள்ளதா என்பதையும்;

(ii) அவ்வாறாயின் அதன் கீழ் சேர்க்கப்படும் விண்ணப்பதாரிகளின் குறைந்தபட்ச தகமைகள் யாவை என்பதையும்;

(iii) இவர்களுக்கு நிரந்தரமானதும் ஓய்வூதியம் உள்ளதுமான பதவிகள் வழங்கப்படுமா என்பதையும்;

(iv) அந்த ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும் நடைமுறை யாது என்பதையும்;

(v) சேர்த்துக்கொள்ளப்படுபவர்களுக்கு வழங்கப்படும் அடிப்படைச் சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் யாவை என்பதையும்;

(vi) இவர்களுக்கு ஒப்படைக்கப்படும் கடமைப் பொறுப்புக்கள் யாவை என்பதையும்;

(vii) இதன் கீழ் ஆட்சேர்க்கப்படும் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

(viii) அரச சேவையில் வெற்றிடங்கள் பெருமளவில் நிலவும் போது அந்த வெற்றிடங்களை நிரப்பாமல் இச் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான காரணங்கள் யாவை என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-02-22

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2013-06-18

பதில் அளித்தார்

கௌரவ கெளரவ விஜய தஹநாயக்க, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks