02

E   |   සි   |  

 திகதி: 2012-07-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

2361/2012: Ceylon Petroleum Coorporation - Foreign Loans

2361/ ’12

 

கெளரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா,—  பெற்றோலியக் கைத்தொழில்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)     (i)      இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கடனிற்கு நிதியீட்டுவதற்காக வெளிநாட்டு மூலத்திடமிருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்பட உள்ளதா என்பதையும்;

(ii) இது சம்பந்தமாக ‘Goldman Sachs’ முதலீட்டு வங்கியுடனும் மேலே சொல்லப்பட்ட பேச்சு வார்த்தையில் சம்பந்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்ட அதன் உள்நாட்டு அல்லது வெளிநாட்டு முகவர்களுடனும் நடைபெறும் பேச்சுவார்த்தையின் நோக்கெல்லையின் விபரங்களையும்

அவர் கூறுவாரா?

(ஆ) (அ) (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள முகவர்கள்,

(i) பிரமிட் திட்டங்களின் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் எனவும்;

(ii) இலங்கையில் அல்லது வேறு இடங்களில் வங்கிகளிடம் அல்லது வியாபார நிறுவனங்களிடம் ஒப்பந்தங்களை அல்லது கடன் கடப்பாடுகளை மீறியதாகவும்;

(iii) மத்திய வங்கியின் உயர் அதிகாரிகளிடம் நெருங்கிய தனிப்பட்ட உறவையும் வர்த்தக வலைப்பின்னலையும் கொண்டவர்கள் எனவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது சொல்லப்பட்டவர்களை என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) “உங்களுடைய வாடிக்கையாளரை அறிந்து வைத்திருங்கள்” மற்றும் சம்பந்தப்பட்ட பணம், பணம் தூய்தாக்கல் அல்லது பயங்கரவாத நிதியீட்டல் என்பவற்றால் கறைபடாதது என்பதை உறுதிப்படுத்துவதற்கும்; இடரைக் குறைப்பதற்கும் தகுந்த செயன்முறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதையும் அவர் கூறுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-07-06

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா, பா.உ.

அமைச்சு

பெற்றோலியக் கைத்தொழில்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks