04

E   |   සි   |  

 திகதி: 2023-06-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

3170/2023: தவணைப் பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுதல்: பெற்றோர்களால் ஏற்கப்படும் செலவு

3170/2023

கௌரவ தயாசிறி ஜயசேக்கர,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) பாடசாலை தவணைப் பரீட்சை வினாத்தாள்கள் மற்றும் ஒப்படைகள் போன்றவற்றை அச்சிடுவதற்கான செலவினங்கள் தற்போது பெற்றோரிடமிருந்து அறவிடப்படுகின்றன என்பதையும்;

(ii) தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த செலவினங்களைத் தாங்கிக்கொள்வது பெற்றோருக்கு கடினமாக உள்ளது என்பதையும்;

அவர் ஏற்றுக்கொள்வாரா?

(ஆ) (i) அரசியலமைப்பின் பிரகாரம் சகல ஆட்களுக்கும் கல்வியில் சமத்துவமான மற்றும் சமமான வாய்ப்புகளைப் பெறுவதற்கான உரிமை மேற்படி அறவீடு காரணமாக மீறப்படுகின்றதா என்பதையும்;

(ii) அச்சு நடவடிக்கைகளுக்கான செலவினத்தை பெற்றோரிடமிருந்து அறவிடுவதைத் தவிர வேறு தீர்வு அதிபர்கள் மற்றும் கல்வி அலுவலர்களுக்கு இல்லையென்பதை அறிவாரா என்பதையும்;

(iii) ஆமெனில், மேற்படி அறவீடுகள் தொடர்பில் அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கை யாது என்பதையும்;

(iv) இந்த நிலைமை காரணமாக, பாடசாலை பாடப் புத்தகங்கள் வழங்கப்படுவதை மட்டுப்படுத்துவதற்கு அல்லது நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-06-08

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-06-08

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks