01

E   |   සි   |  

 திகதி: 2023-05-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

3091/2023: Vacancies in the post of Station Master

3091/2023

கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன,— போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கையில் காணப்படும் புகையிரத நிலையங்களின் பெயர்கள் யாவை;

(ii) மிகச் சிறந்த புகையிரத சேவையினை பேணிச் செல்வதற்காக புகையிரத நிலைய அதிபர்களின் சேவை இன்றியமையாதது என்பதை ஏற்றுக்கொள்வாரா;

(iii) இறுதியாக புகையிரத நிலைய அதிபர்கள் ஆட்சேர்க்கப்பட்டுள்ள திகதி யாது;

(iv) இலங்கை புகையிரத திணைக்களத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள புகையிரத நிலைய அதிபர்களின் எண்ணிக்கை யாது;

(v) புகையிரத நிலைய அதிபர் பதவியில் தற்போது காணப்படும் வெற்றிடங்களின் எண்ணிக்கை யாது;

(vi) மேற்படி வெற்றிடங்களை நிரப்புவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-05-24

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks