பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3090/2023
கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன,— நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வெளிநாட்டு உதவிகளின் மீது கண்டி, காலி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட திகதிகள் யாவையென்பதையும்;
(ii) மேற்படி ஒவ்வொரு நகரத்தையும் அபிவிருத்தி செய்வதற்காக உதவி வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்த சர்வதேச அமைப்புகள் யாவை என்பதையும்;
(iii) மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு நகரத்தையும் அபிவிருத்தி செய்வதற்காக வழங்கப்பட்ட தொகை எவ்வளவு என்பதையும்;
(iv) மேற்படி ஒவ்வொரு நகரத்தினதும் அபிவிருத்திப் பணிகள் நிறைவு செய்யப்படவிருந்த திகதி யாதென்பதையும்;
வெவ்வேறாக அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்படி நகர அபிவிருத்திக் கருத்திட்டம் தாமதமடைவதற்கு ஏதுவாக அமைந்த காரணிகள் யாவை என்பதையும்;
(ii) அக்கருத்திட்டம் தாமதமடைந்ததன் காரணமாக இழக்கப்பட்ட உதவித் தொகை எவ்வளவென்பதையும்;
(iii) உலக வங்கியின் உதவித் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கருத்திட்டங்களை உரிய காலப்பகுதியில் நடைமுறைப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-05-10
கேட்டவர்
கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன, பா.உ.
அமைச்சு
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2023-06-08
பதில் அளித்தார்
கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks