04

E   |   සි   |  

 திகதி: 2012-11-17   பதிலளிக்கப்பட்டவைகள் 

2330/2012: சிவில் பாதுகாப்பு அலுவலர்கள் : சேவையில் உறுதிப்படுத்தல்

2330/ ’12

கௌரவ சஜித் பிரேமதாச,— பிரதம அமைச்சரும், பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      இலங்கை பொலிஸ் சேவைக்கு உதவுவதற்காக 2006.08.02 ஆம் திகதிய 16/1395/206/052 ஆம் இலக்க அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமைய சிவில் பாதுகாப்புத் திணைக்களம் தாபிக்கப்பட்டுள்ளது என்பதையும்;

(ii) யுத்த சூழல் நிலவிய காலத்தில், தேசிய முக்கியத்துவம்மிக்க வைபவங்கள் மற்றும் பல்வேறு அனர்த்த சந்தர்ப்பங்களில் சிவில் பாதுகாப்பு அலுவலர்கள் பூரண அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்கள் என்பதையும்;

(iii) சிவில் பாதுகாப்புத் திணைக்களம் 2009.12.15 ஆம் திகதி வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைய 2009.10.31 ஆம் திகதியன்று தொடர்ச்சியாக 180 நாட்கள் சேவையை பூர்த்தி செய்துள்ள அலுவலர்களின் சேவையை துரிதமாக நிரந்தரமாக்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது என்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) (i) தற்போது சிவில் பாதுகாப்புச் சேவையில் ஈடுபட்டுள்ள பணியாட்டொகுதி எவ்வளவு என்பதையும்;

(ii) மேற்படி சேவையின் பல்வேறு துறைகளிலும் கடமையாற்றுகின்ற ஒவ்வொரு அலுவலருக்கும் தற்போது செலுத்தப்படுகின்ற நாளாந்தச் சம்பளம் எவ்வளவு என்பதையும்;

(iii) நாளாந்த சம்பளத்திற்கு சேவையாற்றுகின்ற மேற்படி திணைக்கள ஊழியர்களின் சேவையை நிரந்தரமாக்கி நிலையான சம்பள நிலையில் வைத்து அரசாங்க ஊழியர்களுக்கு உரித்தான சகல சிறப்புரிமைகளையும் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;

(iv) அதற்கு எடுக்கும் காலவரையறை யாதென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-11-17

கேட்டவர்

கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු නිමල් සිරිපාල ද සිල්වා මහතා

(மாண்புமிகு  நிமல் சிறிபால த சில்வா)

(The Hon. Nimal Siripala de Silva)

ගරු කථානායකතුමනි, අග්‍රාමාත්‍යතුමා සහ බුද්ධ ශාසන හා ආගමික කටයුතු අමාත්‍යතුමා වෙනුවෙන් මා එම ප්‍රශ්නයට පිළිතුර දෙනවා.

(අ)          (i)      ඔව්.

              (ii)      ඔව්.

             (iii)      සිවිල් ආරක්ෂක දෙපාර්තමේන්තුව මඟින් 2009.12.15 දින චක්‍ර ලේඛයක් නිකුත් කර නොමැත.

(ආ) (i) තිස්අට දහස් පන්සියයක් පමණ. (38,500)

(ii) තනතුර දෛනික දීමනාව/ වැටුප් (රු) දිස්ත්‍රික් නිලධාරි 530.00

නියාමක 485.00

උප නියාමක 445.00

සිවිල් ආරක්ෂක භටයින් 405.00

මීට අතිරේකව රාජ්‍ය පරිපාලන චක්‍රලේඛ අනුව ඉහත දෛනික වැටුපට සියයට 15ක දීමනාවක්ද, වැඩ කරන දිනකට රුපියල් 220ක ජීවන වියදම් දීමනාවක්ද ගෙවනු ලැබේ.

(iii) සිවිල් ආරක්ෂක සාමාජිකයන්ගේ සේවය ස්ථිර කර විශ්‍රාම වැටුප් හිමිකම ලබා දීම සඳහා ඉදිරිපත් කළ අමාත්‍ය මණ්ඩල සංදේශය අමාත්‍ය මණ්ඩලය විසින් 2012 අගෝස්තු මස 08 දින අනුමත කර ඇති අතර, ඒ අනුව ඉදිරි කටයුතු සිදු කරමින් පවතී.

(iv) අදාළ චක්‍රලේඛ හා අවශ්‍ය උපදෙස් විශ්‍රාම වැටුප් අධ්‍යක්ෂ ජනරාල් විසින් නිකුත් කළ පසු විශ්‍රාම වැටුප් යෝජනා ක්‍රමය ක්‍රියාත්මක වනු ඇත.

(ඇ) පැන නොනඟී.

 

பதில் தேதி

2013-04-10

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி நிமல் சிறிபால த சில்வா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks