பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2255/ ’12
கெளரவ பீ. ஹரிசன்,— நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) 2011 ஆம் ஆண்டில் இலங்கையில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மேற்பார்வையின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள மாடிவீடுகளின் எண்ணிக்கை, வீடமைப்புக் கிராமங்களின் எண்ணிக்கை, மேற்படி கிராமங்களின் பெயர்கள் மற்றும் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள வீடுகளின் எண்ணிக்கை, பரந்துள்ள வீடுகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதை மாவட்ட மட்டத்தில் வெவ்வேறாக அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) 2011 ஆம் ஆண்டில் அனுராதபுர மாவட்டம் தவிர ஏனைய மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வீடமைப்பு கடன் உதவித்தொகை எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி வீடமைப்புக் கடன் உதவிகளை வழங்குவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள வீடமைப்பு பயனாளிகளின் பெயர்கள் யாவையென்பதையும்
ஒவ்வொரு மாவட்ட மட்டத்தில் வெவ்வேறாக அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) வீடமைப்பு கடன்கள் அரச வங்கிகள் ஊடாக வழங்கப்படுமாயின் அவ்வங்கிகளின் பெயர்கள் யாவையென்பதையும்;
(ii) மேற்படி வீடமைப்புக் கடன்களுக்காக அறவிடப்படும் வட்டி வீதங்கள் யாவையென்பதையும்;
(iii) மேற்படி வட்டியை அறவிடுவதன் மூலம் தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு இலாபம் கிடைப்பதாயின் அத் தொகை எவ்வளவென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-06-20
கேட்டவர்
கௌரவ பி. ஹரிசன், பா.உ.
அமைச்சு
நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks