பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2012-06-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

2237/2012: Vehicle Eco Test

2237/ ’12

 

கெளரவ.பீ.ஹரிசன்,—  போக்குவரத்து அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      வாகனப் புகை பரிசோதனைக் கருத்திட்டத்தின் நோக்கங்கள் யாவை என்பதையும்;

           (ii)     மேற்படி புகைப் பரிசோதனையின் நடைமுறை யாதென்பதையும்;

(iii) 2011 ஆம் ஆண்டில் புகை பரிசோதிக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையினையும் இதற்காக ஒவ்வொரு வாகனத்திற்குமென அறவிடப்பட்ட கட்டணங்கள் ஒவ்வொரு வாகனத்தினதும் வகைக்கு அமைவாக தனித்தனியே யாவை என்பதையும்;

(iv) 2011 ஆம் ஆண்டில் புகை பரிசோதனையின் மூலம் ஈட்டிய முழுப் பணத் தொகை எவ்வளவென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) வாகன புகை பரிசோதனைக் கருத்திட்டத்தில் தனியார் முகவர்களினதும், பொது நிறுவனங்களினதும் பணிகள் தனித்தனியே யாவை என்பதையும்;

(ii) மேற்படி பரிசோதனையை மேற்கொள்ளும் தனியார் முகவர்களின் தெரிவானது ஏற்றுக்கொள்ளப்பட்ட கேள்விப் பத்திர நடைமுறைக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்டதா என்பதையும்;

(iii) முழுமொத்த வருமானத்தில் மேற்படி முகவர்களுக்கு பணம் செலுத்துவதற்கான முறையியல் யாதென்பதையும்;

(iv) மேற்படி முகவர்களின் முகாமைத்துவ பலவீனம் மற்றும் மோசடிகளை கண்டறிவதற்காக உரிய பின்னாய்வுப் பொறிமுறையொன்று அமுலாக்கப்பட்டுள்ளதா என்பதையும்

(v) ஆமெனின், இன்றளவில் அறிக்கையிடப்பட்டுள்ள சம்பவங்கள் மற்றும் அவை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) மேற்படி கருத்திட்டத்தின் அடிப்படை நோக்கங்கள் எய்தப்பட்டுள்ளனவா என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2012-06-21

கேட்டவர்

கௌரவ பி. ஹரிசன், பா.உ.

அமைச்சு

போக்குவரத்து

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks