பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2023-04-04   பதிலளிக்கப்பட்டவைகள் 

1807/2023: Details of imported M-9 train engines

1807/2023

கௌரவ அஜித் மான்னப்பெரும,— போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)     (i)     இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட M-9 புகையிரத என்ஜின்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

           (ii)    மேற்படி புகையிரத என்ஜின்கள் இறக்குமதி செய்யப்பட்ட ஆண்டு யாதென்பதையும்;

(iii) அவை எந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதென்பதையும்;

(iv) இதற்கென செலவிடப்பட்ட தொகை எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) மேற்படி (அ) (i) இல் குறிபிடப்பட்டுள்ள புகையிரத என்ஜின்களில் இன்றளவில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மற்றும் தரித்து வைக்கப்பட்டுள்ள புகையிரத என்ஜின்களின் எண்ணிக்கை தனித்தனியே எத்தனையென்பதையும்;

(ii) தேவைக்கேற்றுவாறு மாத்திரம் புகையிரத என்ஜின்கள் மற்றும் புகையிரதப் பெட்டிகளை இறக்குமதி செய்வதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

(iii) தற்போது தரித்து வைக்கப்பட்டுள்ள புகையிரத என்ஜின்கள் மற்றும் புகையிரதப் பெட்டிகளிலிருந்து பயனைப் பெற்றுக்கொள்வதற்கு மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2023-04-04

கேட்டவர்

கௌரவ அஜித் மான்னப்பெரும, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks