பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1796/2023
கௌரவ இம்தியாஸ் பாகிர் மாகார்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர் ஒருவரை தெரிவு செய்வதற்காக 2020 ஆம் ஆண்டில் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தனவா என்பதையும்;
(ii) மேற்படி ஒவ்வொரு விண்ணப்பதாரியினதும் பெயர் மற்றும் தகைமைகள் வெவ்வேறாக யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்படி விண்ணப்பதாரிகளில் தகுதியுடைய ஒருவரை தெரிவு செய்வதற்கு மதிப்பீட்டுக் குழுவொன்று நியமிக்கப்பட்டதா என்பதையும்;
(ii) அந்த மதிப்பீட்டுக் குழுவின் அங்கத்தவர்களின் பெயர்கள் யாவை என்பதையும்;
(iii) மேற்படி மதிப்பீட்டுக் குழு அமர்வுகள் நடாத்தப்பட்ட திகதிகள் யாவை என்பதையும்;
(iv) மேற்படி மதிப்பீட்டுக் குழுவினால் மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு விண்ணப்பதாரிக்கும் அளிக்கப்பட்ட புள்ளிகள் வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
அவர் சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) இப்பதவிக்கு தகுதியான ஒருவரை தெரிவு செய்யும் பொருட்டு விசேட மூதவைக் குழு கூட்டங்கள் நடாத்தப்பட்டனவா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி ஒவ்வொரு கூட்டமும் நடாத்தப்பட்ட திகதி மற்றும் அதில் பங்கேற்ற அங்கத்தவர்களின் பெயர்கள் வெவ்வேறாக யாவை என்பதையும்;
(iii) மேற்படி மூதவையினால் ஒவ்வொரு விண்ணப்பதாரிக்கும் அளிக்கப்பட்ட புள்ளிகள் வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-03-21
கேட்டவர்
கௌரவ இம்தியாஸ் பாகிர் மாகார், பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks