பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1677/2023
கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன்,— வனசீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) முல்லைத்தீவு மாவட்டத்தின், ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவின், திருமுறிகண்டி கிராம மக்களினால் பயன்படுத்தப்பட்ட சுமார் 10 ஏக்கர் பரப்பளவுடைய காணி யுத்த காலத்துக்கு முன்னர் ஏற்புடைய பிரதேச செயலாளரினால் மேற்குறிப்பிட்ட கிராம மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் அதற்கு இடையூறு செய்தார்கள் என்பதையும்;
(ii) மேற்படி காணியில் இன்றளவில் வீடுகள், வீட்டு அத்திவாரங்கள், கிணறுகள், மலசலக்கூடங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் போன்றவை காணப்படுகின்றன என்பதையும்;
(ii) மேற்படி காணியை மக்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்கு அங்கீகாரத்தைக் கோரி ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளரினால் வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கு எழுத்துமூலமான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் இது வரை அதற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) மேற்குறிப்பிட்ட காணியை மக்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-06-21
கேட்டவர்
கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், பா.உ.
அமைச்சு
வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2023-07-19
பதில் அளித்தார்
கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks