04

E   |   සි   |  

 திகதி: 2023-10-03   பதிலளிக்கப்பட்டவைகள் 

1621/2023: புத்தளம் மாவட்ட அரிசி உற்பத்தியாளர்களின் கூட்டுறவுச் சங்கம்: எல்லையை விஞ்சி வழங்கப்பட்ட கடன்

1621/2023

கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க,— வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2020 மே 07ஆந் திகதிய අමප/20/0722/218/010 ஆம் இலக்க அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்களுக்கு துரித கடன் உதவிகளை வழங்குவதற்காக 2020ஆம் ஆண்டில் கருத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டதை அறிவாரா;

(ii) மேற்குறிப்பிட்ட அமைச்சரவை தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஓர் அளவுகோலுக்கு அமைய, 2020 ஆம் ஆண்டில் புத்தளம் மாவட்ட அரிசி உற்பத்தியாளர்களின் கூட்டுறவுச் சங்கத்துக்கு கூட்டுறவு ஆணையாளரால் விதப்புரை செய்யப்பட்டிருந்த ரூ.10,000,000/- கடன் எல்லையை விஞ்சி ரூ.70,000,000/- கடன் தொகையை வழங்கியமைக்கான காரணங்கள் யாவை;

(iii) விதப்புரை செய்யப்பட்ட கடன் எல்லையை விஞ்சி கடன் வழங்கியுள்ளமை தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-10-03

கேட்டவர்

கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-10-03

பதில் அளித்தார்

கௌரவ நலின் பிரனாந்து, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks