04

E   |   සි   |  

 திகதி: 2023-03-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

1614/2023: காற்று வளங்கள் முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டங்கள்: கண்டி நகரம்

1614/2023

கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கண்டி நகரில், பாதகமான வாயுக்களின் உள்ளடக்கம் அங்கீகரிக்கப்பட்ட செறிவு மட்டத்தை விடவும் உயர்வான பெறுமானத்தைக் கொண்டிருப்பதாக ஆய்வறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும்;

(ii) அதனுடன் தொடர்புடையதாக 2017ஆம் ஆண்டு, உரிய சகல தரப்பினர்களினதும் பங்குபற்றுதலுடன் காற்று வளங்கள் முகாமைத்துவ நிகழ்ச்சித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன என்பதையும்;

(iii) பின்னர் அந்நிகழ்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவது நிறுத்தப்பட்டுள்ளன என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தாமைக்கான காரணங்கள் யாவையென்பதையும்;

(ii) அந்நிகழ்ச்சித் திட்டங்களை மீளவும் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-03-21

கேட்டவர்

கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, பா.உ.

அமைச்சு

சுற்றாடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-05-09

பதில் அளித்தார்

கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks