01

E   |   සි   |  

 திகதி: 2023-03-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

1537/2023: Performance of Agricultural officers

1537/2023

கௌரவ (திருமதி) ராஜிகா விக்கிரமசிங்ஹ,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) நெற் செய்கையின் போதும் வீட்டுத் தோட்ட செய்கையின் போதும் விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்களின் உச்சமட்ட பங்களிப்பைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) களைகளைக் கட்டுப்படுத்தும் போதும் பீடைகள் மற்றும் பூச்சிகளின் தீங்குகளின் போதும் கிருமிநாசினி மற்றும் களைநாசினி விற்பனையாளர்களின் ஆலோசனைகளைப் பெற வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது என்பதை அறிவாரா என்பதையும்;

(iii) மேற்படி விற்பனையாளர்களினால் அதிக விலைகளில் மேற்படி நாசினி வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன என்பதை அறிவாரா என்பதையும்;

(iv) இந்த நிலைமையைத் தடுப்பதற்காக விவசாயத் திணைக்களத்தினால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;

(v) ஆமெனில், அந்நடவடிக்கை யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-03-09

கேட்டவர்

கௌரவ (திருமதி) ராஜிகா விக்கிரமசிங்ஹ, பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks