01

E   |   සි   |  

 திகதி: 2023-03-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

1503/2023: பின்னவல மிருகக்காட்சிசாலை: அபிவிருத்திப் பணிகள்

1503/2023

கௌரவ (திருமதி) கோகிலா குணவர்தன,— வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) பின்னவல மிருகக்காட்சிசாலையின் அபிவிருத்திப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றனவா என்பதையும்;

(ii) மேற்படி அபிவிருத்திப் பணிகள் நிறைவு செய்யப்படவுள்ள திகதி யாதென்பதையும்;

(iii) உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மேற்படி மிருகக்காட்சிசாலையை பார்வையிடுவதற்குத் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளனவா என்பதையும்;

(iv) மேற்படி மிருகக்காட்சிசாலைக்கு எதிர்காலத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காக வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(v) ஆமெனில், அது பற்றிய விபரங்கள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-03-10

கேட்டவர்

கௌரவ (திருமதி) கோகிலா குணவர்தன, பா.உ.

அமைச்சு

வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-06-06

பதில் அளித்தார்

கௌரவ (திருமதி) சட்டத்தரணி பவித்ராதேவி வன்னிஆரச்சி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks