04

E   |   සි   |  

 திகதி: 2023-03-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

1328/2023: அநுராதபுர மாவட்டத்திலுள்ள மக்கள் வங்கிக் கிளைகள்: 2015-2020 வரை வழங்கப்பட்ட கடன்கள்

1328/2023

கௌரவ இஷாக் ரஹுமான்,— நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)     (i)     அனுராதபுர மாவட்டத்தில் உள்ள மக்கள் வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை யாது;

           (ii)    2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை மேற்படி கிளைகளினால் ரூ.5 மில்லியனுக்கு அதிகமாக கடன் வழங்கப்பட்டுள்ள கம்பனிகள் மற்றும் நபர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாது;

(iii) குறிப்பிட்ட காலப்பகுதியில் வழங்கப்பட்டுள்ள கடன் தொகையில் தற்போது அறவிட முடியாதுள்ள கடன் தொகையின் அளவு யாது;

(iv) குறிப்பிட்ட கடன் தொகையினை அறவிடுவதற்காக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா;

(v) மேலே (iii) இல் குறிப்பிடப்படும் கடன் தொகையில் அறவிடமுடியாக் கடனாக பதிவழிக்கப்பட்டுள்ள கடன் தொகை யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2023-03-23

கேட்டவர்

கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-06-20

பதில் அளித்தார்

கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks