பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1327/2023
கௌரவ இஷாக் ரஹுமான்,— கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) எப்பாவல, வரையறுக்கப்பட்ட லங்கா பொஸ்பேட் கம்பனியில் சேவையாற்றுகின்ற ஊழியர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(ii) அதில் நிறைவேற்றுத் தர உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(iii) மேற்படி உத்தியோகத்தர்களின் மாதாந்த போக்குவரத்துக் கொடுப்பனவு எவ்வளவென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) எப்பாவல, வரையறுக்கப்பட்ட லங்கா பொஸ்பேட் கம்பனியினால் மாதாந்தம் எத்தனை தொன் உரம் உற்பத்திச் செய்யப்படுகின்றதென்பதையும்;
(ii) 50 கிலோகிராம் உர மூடையொன்றை உற்பத்தி செய்வதற்கு செலவாகும் தொகை எவ்வளவென்பதையும்;
(iii) உர உற்பத்தியில் பங்கெடுக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) மேற்குறிப்பிட்ட நிறுவனம் நட்டத்தில் இயங்குமொரு நிறுவனமென்பதை ஏற்றுக்கொள்கின்றாரா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி நிறுவனத்தை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றுவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-03-10
கேட்டவர்
கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.
அமைச்சு
கைத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks