04

E   |   සි   |  

 திகதி: 2023-03-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

1326/2023: 2019, 2020/21ஆம் ஆண்டுகளில் சோளச் செய்கை: விபரம்

1326/2023

கௌரவ இஷாக் ரஹுமான்,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2019 ஆம் ஆண்டு இலங்கையில் சோளப் பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலப்பரப்பின் அளவு யாதென்பதையும்;

(ii) 2020/2021 பெரும் போகத்தில் சோளப் பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலப்பரப்பின் அளவு யாதென்பதையும்;

(iii) மேற்படி போகத்தில் பயிர்செய்கைக்குப் பயன்படுத்தப்பட்ட உள்நாட்டு சோள விதைகளின் அளவு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட விதைகளின் அளவு தனித்தனியே யாதென்பதையும்;

(iv) ஒரு கிலோகிராம் உள்நாட்டு சோள விதையின் விலை மற்றும் ஒரு கிலோகிராம் இறக்குமதி செய்யப்பட்ட சோள விதையின் விலை தனித்தனியே எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) ஒரு ஏக்கரில் சோளப் பயிர் செய்கையை மேற்கொள்வதற்குத் தேவையான விதைகளின் அளவு யாதென்பதையும்;

(ii) மேற்படி விதைகளுக்குச் செலவாகும் தொகை எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-03-08

கேட்டவர்

கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-04-25

பதில் அளித்தார்

கௌரவ மஹிந்த அமரவீர, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks