04

E   |   සි   |  

 திகதி: 2012-10-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

2152/2012: ஸ்ரீபாத விகாரையின் தலைமைத் தேரர் தெரிவு : விபரம்

2152/ ’11

கெளரவ தயாசிறி ஜயசேகர,— பிரதம அமைச்சரும், பெளத்த சாசன மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      2011ஆம் ஆண்டு நவெம்பர் மாதம் 25ஆம் திகதி நடைபெற்ற ஸ்ரீபாத விகாரையின் தலைமைத் தேரரைத் தெரிவதற்கான தேர்தலில் போட்டியிட்ட  பிக்குமார்களின் பெயர்கள் யாவை;

(ii) இதில் வாக்களிக்கும் உரிமையுள்ள, வாக்காளர் தேரர்களின் எண்ணிக்கை யாது;

(iii) வாக்களிப்பதற்கு இல்லறத்தினருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்ததா

என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) வாக்காளர்  தேரர்களை பலவந்தமாக கடத்திச் செல்லுதல் அல்லது வாக்குச் சாவடிக்கு வரும் தேரர்களுக்கு இடையூறு விளைவித்தல் இடம்பெற்றுள்ளதா;

(ii) ஆமெனில், இதில் சம்பந்தப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரா;

(iii) இவர்கள் தொடர்பில் எடுக்கப்படும்  நடவடிக்கைகள் யாவை;

(iv) மேற்படி தேர்தல் தொடர்பில்  அரசாங்க அமைச்சர்கள் மற்றும் மக்கள்  பிரதிநிதிகளுக்கு ஏதேனும் கடமைப் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டிருந்ததா

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) ஒவ்வொரு பிறவியிலும் தொடர்ந்துவரும் ஓர் பாபகாரியமான (ஆனந்தரீய பாபகர்மய)  பிக்குகளின் பிரிவினைக்கு, வழிவகுக்கும் சம்பவங்கள் குறிப்பிட்ட காலப் பகுதியில் இடம்பெற்றன என்பதை ஏற்றுக்கொள்வாரா;

(ii) ஆமெனில், அது தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை;

(iii) எதிர்காலத்தில் இவ்வாறானவை இடம்பெறாமலிருக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை

என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2012-10-25

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු එම්.කේ.ඒ.ඩී.එස්. ගුණවර්ධන මහතා (බුද්ධ ශාසන හා ආගමික කටයුතු නියෝජ්‍ය අමාත්‍යතුමා)

(மாண்புமிகு எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தன - பெளத்த சாசன, மத அலுவல்கள் பிரதி அமைச்சர்)

(The Hon. M.K.A.D.S. Gunawardana - Deputy Minister of Buddha Sasana and Religious Affairs)

ගරු නියෝජ්‍ය කථානායකතුමනි,  අග්‍රාමාත්‍යතුමා සහ බුද්ධ ශාසන හා ආගමික කටයුතු අමාත්‍යතුමා වෙනුවෙන් මා එම ප්‍රශ්නයට පිළිතුර දෙනවා.

  (අ)     (i)       පූජ්‍ය දහම්පහළ සීලානන්ද ස්වාමීන් වහන්සේ සහ පූජ්‍ය බෙංගමුවේ ධම්මදින්න ස්වාමීන් වහන්සේ.

(ii) 302යි.

(iii) නැත.

   (ආ (i) නැත.

(ii) අදාළ නොවේ.

(iii) අදාළ නොවේ.

         (iv)     නැත.

 (ඇ) (i) නැත.

(ii) අදාළ නොවේ.

(iii) අදාළ නොවේ.

 (ඈ) අදාළ නොවේ.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பதில் தேதி

2012-10-25

பதில் அளித்தார்

கௌரவ எம்.கே.ஏ.டீ.எஸ். குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks