01

E   |   සි   |  

 திகதி: 2023-03-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0849/2023: Injustice faced by book writers due to distribution of Soft copies of the books

849/2023

கௌரவ காமினி வலேபொட,— வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)    (i)      நூலாசிரியர்களின் அனுமதியின்றி இலாபம் ஈட்டும் நோக்கத்துடன், அச்சிடப்பட்ட நூல்களை பீ.டி.எப் (pdf) ஆக மாற்றியமைத்து விநியோகிப்பதன் காரணமாக மேற்படி நூலாசிரியர்கள் பாரிய அநீதிக்கு ஆளாகியுள்ளனர் என்பதை அறிவாரா என்பதையும்;

(ii) இந்த நிலைமையைத் தவிர்ப்பதற்காகவும் பாதிக்கப்பட்ட நூலாசிரியர்களுக்கு நியாயத்தை நிறைவேற்றுவதற்காகவும் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) தற்போது அச்சிடப்பட்ட பிரதிகள் இல்லாத நூல்களை பீ.டி.எப் (pdf) ஆக மாற்றியமைத்து பேணிப் பாதுகாப்பது முக்கியமானது என்பதை ஏற்றுக்கொள்வாரா;

(ii) ஆமெனில், அதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2023-03-23

கேட்டவர்

கௌரவ காமினி வலேபொட, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks