பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
848/2023
கெளரவ காமினி வலேபொட,— நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2019 டிசம்பர் மாதத்தில் அப்போதைய நிதி அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை ஒன்றின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட வரி மறுசீரமைப்புகளின் காரணமாக 2020 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் அரச வரி வருமானம் வருடாந்தம் சுமார் 600 பில்லியன் ரூபாவை இழந்தது என்பதை அறிவாரா என்பதையும்;
(ii) மேற்படி வரி மறுசீரமைப்புகளின் காரணமாக அரச வருமானம் குறைவதால் ஏற்படக்கூடிய பொருளாதார விளைவுகள் குறித்து மேற்படி வரி மறுசீரமைப்புகளைச் சமர்ப்பித்த உத்தியோகத்தர்களினால் அரசாங்கத்திற்கு அல்லது அமைச்சரவைக்கு நிபுணர் அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்ததா என்பதையும்;
(iii) மேற்படி வரி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் வருடாந்தம் அரசாங்கம் இழக்க வேண்டியேற்படும் என மதிப்பிடப்பட்ட வரி வருமானம் ஒவ்வொரு வரி வகையின் பிரகாரம் வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
(iv) மேற்படி வரி மறுசீரமைப்புகளின் காரணமாக அரச வரி வருமானம் குறைவதால் அரச வருமானத்தில் ஏற்படும் வீழ்ச்சியை தீர்க்கும் விதத்தை குறிப்பிட்ட வரி மறுசீரமைப்புப் பிரேரணைகளைச் சமர்ப்பித்த உத்தியோகத்தர்கள் அரசாங்கத்திற்கு முன்வைத்திருந்தனரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-03-09
கேட்டவர்
கௌரவ காமினி வலேபொட, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks