04

E   |   සි   |  

 திகதி: 2012-04-17   பதிலளிக்கப்பட்டவைகள் 

2103/2012: O/L Examination - Candidates

2103/ ’11

 

கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க,—  கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    2005 தொடக்கம் 2010 ஆம் ஆண்டு வரை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய பாடசாலை விண்ணப்பதாரர்களில்

           (i)      அந்தப் பரீட்சையில் 8 பாடங்களிலும் சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

(ii) சிங்களம், தமிழ், ஆங்கில மொழி மூலங்களுக்கு ஏற்ப சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

(iii) கணிதம், தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் சித்தியடையாத மணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்

வருடாந்த ரீதியாக மாவட்ட  அடிப்படையில் வெவ்வேறாக அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) அரச பாடசாலைகளில் கணிதம், தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய பாடங்களை கற்பிப்பதற்காக உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை மாவட்ட அடிப்படையில் வெவ்வேறாக எவ்வளவு என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(இ) (i) சிங்கள மொழியைத் தவிர ஆங்கில மொழி மூலத்தையும் பயன்படுத்தும் தேசிய மற்றும் மாகாண சபை பாடசாலைகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

(ii) மேற்படி பாடசாலைகளில் ஒவ்வொரு பாடத்தையும் கற்பிக்க இருக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், என்?

 

கேட்கப்பட்ட திகதி

2012-04-17

கேட்டவர்

கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks