01

E   |   සි   |  

 திகதி: 2023-04-04   பதிலளிக்கப்பட்டவைகள் 

0687/2023: Government houses distributed in Vavunadivu Divisional Secretary area

687/2023

கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்,— நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)     (i)     மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் வாழும் மக்களுக்கு 2018 ஆம் ஆண்டு 44 வீடுகள் கையளிக்கப்பட்டன என்பதையும்;

           (ii)    ஆயினும், இதுவரை அவ்வீடுகளின் நிர்மாணப் பணிகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்குறிப்பிட்ட வீடுகளின் நிர்மாணப் பணிகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;

(ii) அவ்வீடுகளின் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;

(iii) ஆமெனில், அத்திகதி யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2023-04-04

கேட்டவர்

கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், பா.உ.

அமைச்சு

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks