01

E   |   සි   |  

 திகதி: 2023-03-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0684/2023: Divinding the Divisional Secretariat in Kalmunai Region

684/2023

கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்,— பிரதம அமைச்சர் மற்றும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதேச செயலகத்துக்கென கணக்காளரொருவர் நியமிக்கப்பட்டுள்ளாரா என்பதையும்;

(ii) மேற்படி பிரதேச செயலகத்துக்கு கணக்காளரொருவரை நியமிப்பதில் தாமதம் ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று, களுவாஞ்சிக்குடி மற்றும் போரத்தீவுபற்று ஆகிய மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளினதும் சனத்தொகை அதிகமென்பதால் மேற்படி ஒவ்வொரு பிரிவையும் இரண்டு பிரிவுகளாகப் பிரிப்பதற்கு இன்றளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;

(iii) இது தொடர்பாக மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-03-07

கேட்டவர்

கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks