04

E   |   සි   |  

 திகதி: 2023-03-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0442/2023: Issues in sports complex in Weraduwa Bandaranaike school

442/2023

கௌரவ புத்திக பத்திறண,— பிரதம அமைச்சர் மற்றும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) மாத்தறை, வேரதூவ பண்டாரநாயக்க வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தை, பிரதேசத்தைச் செர்ந்த விளையாட்டு வீரர்கள் பயிற்சி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தினர் என்பதையும்;

(ii) மேற்படி மைதானத்தை வியாபார நடவடிக்கையொன்றிற்கு வழங்க முன்னாள் பிரதேச செயலாளரினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி நிலத்தை வழங்கும்போது கேள்விப்பத்திரம் கோரப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், மேற்படி கேள்விப்பத்திரம் கோரப்பட்ட திகதி யாதென்பதையும்;

(iii) கேள்விப்பத்திரங்களைச் சமர்ப்பித்த ஒவ்வொரு நபரினதும் பெயர் மற்றும் கேள்விப்பத்திரத்தின் பெறுமதி என்பன வெவ்வேறாக யாவையென்பதையும்;

(iv) கேள்விப்பத்திரத்தைப் பெற்றுக்கொண்ட நபரது/ நிறுவனத்தினது பெயர், முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம் என்பன வெவ்வேறாக யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?

(இ) (i) மேற்படி விளையாட்டு மைதானத்தை விளையாட்டு நடவடிக்கைகளுக்காக பிரதேச மக்களுக்கு மீண்டும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;

(ii) ஆமெனில், அத் திகதி யாதென்பதையும்;

அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-03-07

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks