04

E   |   සි   |  

 திகதி: 2023-03-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

0417/2023: Details of Dairy Industry

417/2023

கௌரவ கயந்த கருணாதிலக்க,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கையில் பிரதானமாக திரவப் பால் உற்பத்தி செய்யப்படும் பிரதான மாவட்டங்கள் யாவை என்பதையும்;

(ii) மேற்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் உற்பத்தி செய்யப்படும் திரவப் பாலின் அளவு வெவ்வேறாக யாதென்பதையும்;

(iii) இன்றளவில் நிறுவப்பட்டுள்ள திரவப் பால் சேகரிப்பு நிலையங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

(iv) "சுபீட்சத்தின் நோக்கு" கொள்​கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு திரவப் பால் உற்பத்திகளை களஞ்சியப்படுத்துவதற்கான கொள்ளளவினை அதிகரிப்பதற்காக சூரிய சக்தியில் இயங்கும் சிறியளவிலான பால் குளிரூட்டும் தொழில்நுட்ப முறை இன்றளவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-03-09

கேட்டவர்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks