பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2023-03-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

0379/2023: Environment effect from pine & turpentine trees

379/2023

கௌரவ சட்டத்தரணி வசந்த யாப்பாபண்டார,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கண்டி மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள பைனஸ் மற்றும் டர்பன்டைன் தாவரங்கள் காரணமாக ஏற்படும் சுற்றாடல் அழிவு கணிப்பீடு செய்யப்பட்டுள்ளதா;

(ii) மேற்படி தாவரங்களை அகற்றுவதற்கான வேலைத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) பைனஸ் மற்றும் டர்பன்டைன் தாவரங்கள் பயிரிடப்பட்டுள்ள அரச காணிகளின் அளவு யாது;

(ii) மேற்படி காணிகள் அமைந்துள்ள பிரதேசங்கள் யாவை;

(iii) அரச காணிகளில் பயிரிடப்பட்டுள்ள பைனஸ் மற்றும் டர்பன்டைன் தாவரங்களை அகற்றி இக்காணிகளை பயிர்ச்செய்கைக்காக இளம் பயிர்ச்செய்கையாளர்களுக்கு வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்று தயார் செய்யப்பட்டுள்ளதா;

என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-03-09

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி வசந்த யாப்பாபண்டார, பா.உ.

அமைச்சு

சுற்றாடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks