பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2023-03-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0378/2023: Details of Schools

378/2023

கௌரவ சட்டத்தரணி வசந்த யாப்பாபண்டார ,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கையில் தாபிக்கப்பட்டுள்ள அரசாங்கப் பாடசாலைகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;

(ii) மேற்படி பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;

(iii) இலங்கையிலுள்ள பாடசாலைகள் வகைப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை யாதென்பதையும்;

(iv) இலங்கையின் பாடசாலைக் கல்வியில் முரண்பாடு காணப்படுவதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(v) மேற்படி முரண்பாட்டை நீக்குவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) 2021 ஆம் ஆண்டில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

(ii) மேற்படி எண்ணிக்கையானது, பரீட்சைக்குத் தோற்றிய மொத்த மாணவர் எண்ணிக்கையின் சதவீதமாக யாதென்பதையும்;

(iii) பரீட்சையில் சித்தியடைந்து பிரபல்யமான பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

(iv) மேற்படி எண்ணிக்கையானது, பரீட்சைக்குத் தோற்றிய மொத்த மாணவர் எண்ணிக்கையின் சதவீதமாக யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-03-07

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி வசந்த யாப்பாபண்டார, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks