02

E   |   සි   |  

 திகதி: 2012-02-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

2059/2012: Janatha Pola, Nugegoda - Removed Traders

2059/ ’11

 

கெளரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா,— பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேற்பதற்கு,—

(அ)    (i)     பழைய நுகேகொட 'ஜனதாபொல' இடிக்கப்பட்டபோது, அதிலிருந்து வியாபாரிகளை அகற்றுவதற்கும் பின்பு 2011 ஒற்றோபர் முதல் வாரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 'ஜனதாபொலவில்' கடைகளை கொடுக்க வியாபாரிகளைத் தெரிவு செய்வதற்கும் கைக்கொள்ளப்பட்ட முழுமையான நடைமுறைகளையும் என்ன என்பதையும்;

(ii) வியாபாரிகளை அகற்றல், புதிய கடைகளை ஒதுக்கிக் கொடுத்தல் தொடர்பான செயற்பாடுகளுக்குப் பொறுப்பாக இருந்த ஆட்களின் பெயர்களையும்;

(iii) வியாபாரிகளை அகற்றல், புதிய கடைகளை ஒதுக்கிக் கொடுத்தல் தொடர்பான செயற்பாடுகள் இடம்பெற்ற திகதிகளையும்;

(iv) (அ)(i) இன் பிரகாரம் அகற்றப்பட்ட வியாபாரிகள் மற்றும் அளவு, கட்டிடம் உள்ள கடைகள், கட்டிடம் இல்லாது நிலம் குறிக்கப்பட்ட கடைகள் என்ற அடிப்படையில் கடை கொடுக்கப்பட்ட வியாபாரிகளின் எண்ணிக்கை, பெயர், முகவரியையும்

அவர் தனித்தனியாகக் கூறுவாரா?

(ஆ) (i) அகற்றப்பட்ட, இருத்தப்பட்ட வியாபாரிகள் என்ற இரு பட்டியல்களிலும் முரண்பாடுகள் உள்ளதா என்பதையும்;

(ii) அவ்வாறாயின் முரண்பாட்டைத் திருத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையையும்

அவர் கூறுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2012-02-22

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா, பா.உ.

அமைச்சு

பொருளாதார அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks