02

E   |   සි   |  

 திகதி: 2012-02-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

2058/2012: Employees Provident Fund - Fund Management Activity

2058/ ’11

 

கெளரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா,—  நிதி திட்டமிடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) முகாமைத்துவச் செயற்பாடுகள் இலங்கை மத்திய வங்கியின் நிதி சபையினால் பொறுப்பெடுக்கப்பட்டுள்ளது என்பதை அவர் அறிவாரா?

(ஆ) (i) ஊ.சே.நிதியத்தின் நிதி முகாமைத்துவம் நிதிச் சபையின் அங்கீகாரத்துடன், முதலீட்டுக் கொள்கைக் கூற்றின் பிரகாரம், முதலீட்டுக் குழுவின் பணிப்பில் நடத்தப்படுகிறதா என்பதையும்;

(ii) ஊ.சே.நி. திணைக்களத்தின் நிதி முகாமைத்துவப் பிரிவினால் சமர்ப்பிக்கப்பட்ட முதலீட்டு முன்மொழிவுகளை மதிப்பீடு செய்ய ஒழுங்குக் கிரமமாக முதலீட்டு சபை கூடுகிறதா என்பதையும்;

(iii) ஊ.சே.நி. முதலீட்டுக் கொள்கையின் பிரகாரம் முதலீட்டுத் தீர்மானங்கள் எடுக்கப்படுகிறதா என்பதையும்;

(iv) கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான முதலீட்டுக் குழு கூட்ட அறிக்கைகள் சபாபீடத்தில் இடப்படுகின்றனவா என்பதையும்

அவர் கூறுவாரா?

(இ) கடந்த இரண்டு வருடங்களாக முதலீட்டுக் குழு தொடர்பாக,

(i) அதன் எல்லா உறுப்பினர்களினதும் பெயர், நியமனத்திகதி ஆகியவற்றையும்;

(ii) கூட்டம் நடந்த திகதிகளை சமூகமளித்த உறுப்பினர்களின் பெயர்களுடனும்

அவர் கூறுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-02-21

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா, பா.உ.

அமைச்சு

நிதி, திட்டமிடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks