01

E   |   සි   |  

 திகதி: 2012-03-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

2056/2012: Vice Chancellor - University of Vocational Technology

2056/ ’11

 

கெளரவ இரான் விக்கிரமரத்ன,— இளைஞர் அலுவல்கள், திறன் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    வாழ்க்கைத்தொழில்சார்  தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்தின் உப-வேந்தர் 2008ஆம் ஆண்டின் 31ஆம் இலக்கச் சட்டத்தில் குறித்துரைக்கப்பட்ட ஏற்பாடுகளின் கீழ் நியமிக்கப்பட்டிருப்பதை அவர் அறிவாரா?

(ஆ)    (i) வாழ்க்கைத்தொழில்சார்  தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்தின் உப- வேந்தருக்கான பதவியின் தற்போதைய நிலைமையையும்;

(ii) 2010 ஜனவரி மாதத்திற்குப் பின்னர் தற்போதைய உப-வேந்தர் ஒழுங்கற்ற முறையில் பதவியைத் தொடருவதற்கு அனுமதி வழங்குவதில் பொறுப்பாயுள்ள  நபரையும்;

(iii) தற்போதைய உப-வேந்தரின் தலைமையின் கீழ் ஆளுநர் சபை மற்றும் கல்விசார் விரிவுரையாளர் குழுவினால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களுக்குப்   பொறுப்பாக உள்ள நபரையும்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2012-03-23

கேட்டவர்

கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ.

அமைச்சு

இளைஞர் அலுவல்கள், திறன் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks