பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2055/ ’11
கௌரவ துனேஷ் கன்கந்த,— நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ அமைச்சின் செயலாளரினால் “களுகங்கை நீரேந்து பிரதேசத்தினுள் நீர் வள அபிவிருத்தி பற்றிய கற்கையை மேற்கொள்ளல் மற்றும் ஆற்று நீரினால் இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களில் ஏற்படுகின்ற வெள்ளப்பெருக்கு நிலைமையை குறைப்பதற்கான தீர்வுகளைக் காணல்” என்ற தலைப்பில் மேற்படி மாவட்டங்களின் செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்பதையும்;
(ii) அக்கடிதத்தின் மூலம் மாவட்ட கமத்தொழில் அபிவிருத்திக் குழுக்களின் போது சம்பந்தப்பட்ட அரசியல் மேலாண்மைகளையும், மத்திய அரசு நிறுவனங்களையும் விழிப்புணர்வூட்டுமாறு வேண்டப்பட்டுள்ளது என்பதையும்;
(iii) இந்த வேலைத்திட்டத்தின் கீழ் மல்வலை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் குறித்த நிலஅளவை நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதையும்;
(iv) இந்த நடவடிக்கைகள் தொடர்பாக பிரதேச மக்கள் உரிய விதத்தில் விழிப்புணர்வூட்டப்படாமையின் காரணமாக அவர்கள் மத்தியில் பதற்றமான நிலைமை உருவாகியுள்ளது என்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) மேற்படி கடிதம் வெளியிடப்பட்ட பின்னர் இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கு இரண்டு தடவைகள் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், இந்த விடயம் நிகழ்ச்சி நிரலிலேனும் உள்ளடக்கப்படாமைக்கான காரணம் யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-03-23
கேட்டவர்
கௌரவ துனேஷ் கங்கந்த, பா.உ.
அமைச்சு
நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks