01

E   |   සි   |  

 திகதி: 2023-03-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0003/2023: இலங்கை மத்திய வங்கிப் பிணைமுறி மோசடி: விபரம்

3/2023

கௌரவ சமிந்த விஜேசிறி,— நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) திரு. அர்ஜுன் மகேந்திரன் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகப் பணியாற்றிய காலப்பகுதி யாதென்பதையும்;

(ii) மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் இலங்கை மத்திய வங்கியில் பிணை முறி மோசடியொன்று இடம்பெற்றதென்பதை ஏற்றுக்கொள்கின்றாரா என்பதையும்;

(iii) மேற்படி பிணை முறி மோசடியுடன் திரு. அர்ஜுன் மகேந்திரன் நேரடியாக தொடர்புபட்டுள்ளதாக அது தொடர்பில் நியமிக்கப்பட்ட சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் குற்றஞ்சாட்டப்பட்டதென்பதை அறிவாரா என்பதையும்;

(iv) திரு. அர்ஜுன் மகேந்திரனை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு நியமிப்பதற்கு விதப்புரை செய்த மற்றும் மேற்படி நியமனத்தை அங்கீகரித்த அரசியல் அதிகாரத் தரப்பு ஆட்களின் பெயர்கள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-03-22

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-06-08

பதில் அளித்தார்

கௌரவ செஹான் சேமசிங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks