பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2001/ ’11
கௌரவ ஆர்.எம். ரஞ்சித் மத்துமபண்டார,— உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) புத்தள நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய பிரதேச சபைக் கட்டடிடத்தில் அமைந்துள்ள 17 விற்பனைக் கூடங்களில் கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் மீன் விற்பனைக் கூடத்திற்காக ஒதுக்கப்பட்ட 11 ஆம் இலக்க விற்பனைக் கூடத்தைத் தவிர, இலக்கம் 4 தொடக்கம் இலக்கம் 17 வரையுள்ள விற்பனைக் கூடங்கள் அனைத்தும் கேள்விப் பத்திரங்கள் கோரப்பட்டு விற்பனைக் கூடமொன்று ரூபா 20 இலட்சம் வீதம் வழங்கப்பட்டதென்பதையும்;
(ii) 1,2,3 ஆம் இலக்க விற்பனைக் கூடங்கள் சபையின் எதிர்கால தேவைக்காகப் பயன்படுத்தும் பொருட்டு கேள்விப் பத்திரம் மூலம் வழங்காமலிருப்பதற்கு சபையின் மாதாந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதென்பதையும்;
(iii) பின்னர் மேற்படி மூன்று விற்பனைக் கூடங்களுக்காக தமது நண்பர்கள் சமர்ப்பித்த ஒரு விற்பனைக் கூடத்திற்கு ரூபா 10 இலட்சம் போன்றதொரு ஆகக்குறைந்த பெறுமதியைக் கொண்ட கேள்விப் பத்திரங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டனவென்பதையும்;
(iv) வெளிப்படைத்தன்மையின்றி மேற்கொள்ளப்பட்ட மேற்படி கேள்விப் பத்திரம் கோரலால் மேற்படி பிரதேச சபைக்கு கிடைக்க வேண்டிய பெருமளவு வருமானம் இழக்கப்பட்டுள்ளதென்பதையும்;
(v) மேற்படி மோசடியான கேள்விப் பத்திரம் கோரலின் ஊடாக பெருமளவு நிதி மோசடி இடம்பெற்றுள்ளதென்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) மேற்படி கேள்விப் பத்திரம் கோரல் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை ஒன்றை நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-02-10
கேட்டவர்
கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார, பா.உ.
அமைச்சு
உள்ளூராட்சி, மாகாண சபைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks