04

E   |   සි   |  

 திகதி: 2013-03-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

1974/2013: அரச நிறுவனங்களில் பட்டதாரி நியமனங்கள் :பதவியுயர்வு முறைமை

1974/ ’11

கெளரவ புத்திக பத்திரண,—  கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     2005 ஆம் ஆண்டில் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் மிகை ஊழியர் அடிப்படையில் அரச நிறுவனங்களிலும் அரச பாடசாலைகளிலும் நிதி உதவியாளர், அபிவிருத்தி உதவியாளர் மற்றும் முகாமைத்துவ உதவியாளர் என நியமனங்கள் வழங்கப்பட்டதென்பதையும்;

(ii) இவர்களுக்கு இற்றைவரை பதவியுயர்வு முறையியலொன்று உருவாக்கப்படவில்லை என்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) (i) அரச பாடசாலைகளில் பணியாற்றும் மேற்படி நியமனம் பெற்றவர்களுக்கு இப்பாடசாலைகளில் அல்லது வேறு பாடசாலைகளில் ஆசிரிய நியமனங்களை பெறுவதற்கான சாத்தியம் உள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், இதற்கு பின்பற்றப்படவேண்டிய முறையியல் யாதென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) (i) மேற்படி நியமனம் பெற்றவர்களுக்கு பதவியுயர்வுக்கான முறையியலொன்று உருவாக்கப்படுமா என்பதையும்;

(ii) ஆமெனில், இதற்கு எவ்வளவு காலம் எடுக்குமென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-03-20

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2013-03-20

பதில் அளித்தார்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks