பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1913/ ’11
கௌரவ நிரோஷன் பெரேரா,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) புத்தளம் மாவட்டத்தின் மாரவில அரசாங்க வைத்தியசாலையின் பிரேதஅறையில் குளிரூட்டல் வசதிகள் இல்லை என்பதை அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி வைத்தியசாலைக்கென குளிரூட்டல் அறையொன்றை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) அவ்வாறாயின், மேற்படி குளிரூட்டல் அறையை நிர்மாணிக்க மதிப்பீடு செய்யப்பட்ட தொகை எவ்வளவு என்பதையும்;
(iii) எவ்வளவு காலத்தினுள் மேற்படி குளிரூட்டல் அறையை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) தற்போது மேற்படி வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற சட்ட மருத்துவ உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(ii) அரசாங்க விடுமுறை தினத்தில் அல்லது சட்ட மருத்துவ உத்தியோகத்தர் லீவு பெற்றுள்ள சந்தர்ப்பத்தில் மேற்படி வைத்தியசாலையில் மரண விசாரணை மேற்கொள்ளப்படுவதில்லை என்பதனால், குளிரூட்டல் அறை வசதிகள் இல்லாத மேற்படி வைத்தியசாலையில் பிரேதங்களை பழுதடையாது வைத்திருப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-02-09
கேட்டவர்
கௌரவ நிரோஷன் பெரேரா, பா.உ.
அமைச்சு
சுகாதர
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks