02

E   |   සි   |  

 திகதி: 2012-02-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

1911/2012: National Involuntary Resettlement Policy

1911/ ’11

 

கெளரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா,—  மீள்குடியேற்ற அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)  2001 இல் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய சுயமாக முன்வராதோர் மீளக்குடியமர்த்தல் கொள்கையின் (NIRP) கோட்பாடுகளின் பிரகாரம்;

           (i)     தவிர்க்க முடியாத காரணங்களின் நிமித்தம் மாத்திரமே சுயமாக முன்வராதோர் தொடர்பான மீள்குடியேற்றங்கள் நடைமுறைப்படுத்தப் படுகின்றன என்பதையும்;

(ii) பாதிக்கப்பட்ட மக்களை முழுமையாக கலந்தாலோசித்ததன் பின்னரே மீள்குடியேற்றத்திற்கான இடம், வாழ்வாதாரம், நட்டஈடுகள், அபிவிருத்தி தொடர்பான விருப்பங்கள் ஆகியவற்றைத் தெரிவுசெய்தல் ஆகியவை நிர்ணயிக்கப்படுகின்றன என்பதையும்;

(iii) இந்த காணி, கட்டமைப்புகள், வாழ்வாதாரங்கள் போன்றவற்றைக் கவனத்திற் கொண்டு மாற்றீட்டுக் காணிகளை வழங்குதல் அல்லது நட்ட ஈடாக பணத்தை வழங்குதல், மேற்கொள்ளப்படுகின்றது என்பதையும்

(iv) மாற்றீட்டுப் பெறுமதிகள் முழு காணிக்குமான நட்டஈடாக உடனடியாக வழங்கப்பட்டன என்பதையும்;

(v) காணிக்கான ஆவணப்படுத்தப்பட்ட உரித்தைக் கொண்டிராத மக்கள் நீதியாகவும் நேர்மையாகவும் நடத்தப்பட்டனர் என்பதையும்;

(vi) பாதிக்கப்பட்ட மக்கள் தம்மை மீள்கட்டியெழுப்புவதற்கு உதவி வழங்கப்பட்டதுடன் தமது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும்  வசதிகள் செய்யப்பட்டன என்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) (i) 2010 சனவரி முதல் கொழும்பு மாநகர சபை பிரதேசத்தினுள் தேசிய சுயமாக முன்வராதோர் மீளக் குடியமர்த்தல் கொள்கைக்கு (NIRP) உடன்பட்ட சந்தர்ப்பங்களை நடைமுறைப்படுத்திய முகவராண்மைகளுடனும்;

(ii) ‘தேசிய சுயமாக முன்வராதோர் மீளக்குடியமர்த்தல் கொள்கை’ சகல மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதான நகரங்கள் ஆகியவற்றில் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படுமா என்பதையும்

அவர் கூறுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-02-08

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா, பா.உ.

அமைச்சு

காணி, காணி அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks