01

E   |   සි   |  

 திகதி: 2011-12-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

1909/2011: Sharia Law

1909/ ’11

 

கௌரவ ரஞ்ஜன் ராமநாயக்க,— வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      வெளிநாட்டுத் தொழில்வாய்ப்புகளுக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்கின்ற பெரும்பாலான ஊழியர்களுக்கு அந்நாடுகளில் அமுலில் உள்ள ஷரிஆ சட்டம் மற்றும் ஏனைய சட்டங்கள் தொடர்பான அறிவு இல்லை என்பதையும்;

(ii) இதன் காரணமாக, வெளிநாட்டுத் தொழில்களில் ஈடுபடும்போது இவர்களுக்கு பல்வேறு சிக்கல்களுக்கு முகம்கொடுக்க நேரிட்டுள்ளதென்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) (i) மத்திய கிழக்கு நாடுகளின் சட்டங்கள் தொடர்பில் அறிவின்மை காரணமாக அந்நாடுகளின் சட்டங்களின் கீழ் குற்றவாளியாக்கப்படுகின்ற இலங்கை ஊழியர்களுக்கு சட்ட உதவி வழங்கும் வேலைத்திட்டமொன்று உள்ளதா என்பதையும்;

(ii) இன்றேல், அவ்வாறான வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்தி மேற்படி ஊழியர்கள் எதிர்நோக்குகின்ற சிக்கல்களைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

(iii) அவ்வாறாயின், அத்தகைய வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்துகின்ற திகதி யாது என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2011-12-21

கேட்டவர்

கௌரவ ரன்ஜன் ராமநாயக்க, பா.உ.

அமைச்சு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks