02

E   |   සි   |  

 திகதி: 2011-12-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

1736/2011: Lotteries - Issued by Cooperative Society -Puttalama

1736/ ’11

 

கெளரவ பாலித ரங்கே பண்டார,— கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    புத்தளம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினால் 2009ஆம் ஆண்டில் லொத்தர்  விற்பனையொன்று நடத்தப்பட்டுள்ளதென்பதை அவர் அறிவாரா?

(ஆ)    (i)     மேற்படி லொத்தருக்காக அச்சிடப்பட்ட சீட்டுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) அதில் விற்பனை செய்யப்பட்ட சீட்டுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(iii) மேற்படி லொத்தர் விற்பனையின் மூலம் கிடைத்த மொத்த வருமானம் யாதென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) (i) மேற்படி லொத்தர் விற்பனையுடன் சம்பந்தப்பட்ட சீட்டிழுப்பு நடத்தப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) அவ்வாறாயின், அதில் வெற்றியீட்டியவர்கள் யாவர் என்பதையும்;

(iii) சீட்டிழுப்பு நடத்தப்படவில்லையாயின், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;

(iv) இதுவரையில் சீட்டிழுப்பு நடாத்தப்படாமை தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2011-12-19

கேட்டவர்

கௌரவ பாலித ரங்கே பண்டார, பா.உ.

அமைச்சு

கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks