04

E   |   සි   |  

 திகதி: 2011-10-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

1614/2011: Gramaniladari Divisions - Marudankeni Divisional Secratarial

1614/ ’11

 

கெளரவ ஈ. சரவணபவன்,— பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

           (ii)    அங்கு சேவையில் ஈடுபட்டுள்ள கிராம உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

(iii) மீள்குடியேற்றம் இடம்பெறுகின்ற இப்பிரதேசங்களில் நிலவும் கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு துரிதமாக நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) யாழ்ப்பாண நிருவாக மாவட்டத்தின் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளில் நிலவும் கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(ii) யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது நிரந்தர கிராம உத்தியோகத்தர்கள் இல்லாத, பிரதேச செயலாளர் பிரிவுகள் மட்டத்தில் பதில் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் எண்ணிக்கை வெவ்வேறாக  யாவையென்பதையும்;

(iii) மேற்படி பகுதியில் நிலவும் கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2011-10-21

கேட்டவர்

கௌரவ ஈ. சரவணபவன், பா.உ.

அமைச்சு

பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks