பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1613/ ’11
கெளரவ ஈ. சரவணபவன்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கிளிநொச்சி கல்வி வலயத்தில் சேவையாற்ற வேண்டிய கல்வி நிருவாகச் சேவை உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(ii) தற்போது கிளிநொச்சி கல்வி வலயத்தில் சேவையாற்றும் கல்வி நிருவாகச் சேவை உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(iii) மேற்படி கல்வி வலயத்தில் தற்போது நிலவுகின்ற கல்வி நிருவாகச் சேவை உத்தியோகத்தர்களுக்கான பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
(iv) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) கிளிநொச்சி கல்வி வலயத்துக்காக அங்கீகரிக்கப்பட்ட இலங்கை அதிபர் சேவையின் I, II மற்றும் III ஆம் தர அதிபர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
(ii) தற்போது சேவையில் ஈடுபட்டுள்ள இலங்கை அதிபர் சேவையின் I, II மற்றும் III ஆம் தர அதிபர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
(iii) அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் தொகையின் பிரகாரம் இருக்க வேண்டிய ஒவ்வொரு தரத்திலுமான அதிபர்களின் எண்ணிக்கையை மேற்படி கல்வி வலயத்துக்கு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2011-10-07
கேட்டவர்
கௌரவ ஈ. சரவணபவன், பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks